பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று (செப்.5) நடைபெற்ற ஜூடோவின் ஆடவர் 60 கிலோ ஜே1 பிரிவில் கபில் பர்மர் வெண்கலம் வென்றார். வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரேசிலின் எலியேல்டன் டி ஒலிவேராவை 10-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். அவரை வெறும் 33 வினாடிகளில் 'இப்போன்' மூலம் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதனால், பதக்கங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அவற்றில், ஐந்து தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்கள் ஆகும்.