பாரா ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய ஜோடி தோல்வி

54பார்த்தது
பாரா ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய ஜோடி தோல்வி
பாரா ஒலிம்பிக் வில்வித்தை கலப்பு ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்-பூஜா ஜோடி ஸ்லோவேனியா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி