விசிக கவுன்சிலரை வெளியேற கூறி எச்சரிக்கை விடுத்த மேயர்

52பார்த்தது
மதுரை மாநகராட்சியின் 31 வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று தொடங்கியது. அப்போது பல்வேறு தீர்மானங்களை மேயர் வாசித்துகொண்டிருந்தார். அப்போது மாமன்ற கூட்டத்திற்குள் மாநகராட்சி 71ஆவது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் இன்குலாப்(எ) முனியாண்டியின் செல்போன் ரிங் அடித்தது.

இதனை கேட்டு டென்சன் ஆன மேயர் யார் செல்போன் ரிங் அடித்ததோ அவரை வெளியேற்றுங்கள் என எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து விசிக கவுன்சிலர் முனியாண்டி சாரி சொல்லிவிட்டு மீண்டும் அமர்ந்த பின்னர் இதுபோன்று செல்போன் ரிங் அடித்தால் அவர்களை வெளியேற்றுங்கள் என மேயர் கூறினார்.

மேலும் கவுன்சிலர் கூட்டத்தில் 2 மணி நேரம் செல்போன் இல்லாமல் இருக்க முடியாதா? என கேள்வி எழுப்பினார்.

இது குறித்து பேசிய விசிக கவுன்சிலர் இன்குலாப்:

எனது செல்போன் எதிர்பாராத விதமாக ரிங் அடித்து விட்டது. அதற்கு வெளியேற்றுங்கள் என்று மேயர் கூறி இருந்தால் அது கண்டிக்ககூடிய செயல் என்றார்.

இன்றைய இணைய யுகத்தில் அனைத்து தகவல்களும், அனைத்து தேவைகளும் செல்போன் மட்டுமே பிரதானமாக உள்ள மக்கள் பிரதிநிதிகளை செல்போன் 2 மணி நேரம் பயன்படுத்தக்கூடாது என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. எனவே செல்போன்களை அனுமதித்து சைலண்ட் மோடில் வைத்து பேசுவதற்கு மட்டும் வெளியில் செல்வதற்கான அனுமதி போன்ற சில தளர்வுகளை அளிக்கலாம் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி