விமான எஞ்சின் உற்பத்தி நிறுவனமான ஜிஇ ஏரோஸ்பேஸ், 99 எஃப்404-ஐஎன்20 இன்ஜின்களில் முதல் இயந்திரத்தை தேஜாஸ் லைட் காம்பாட் ஏர்கிராஃப்ட் எம்கே 1 ஏ போர் விமானத்திற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் இடம் வழங்கியுள்ளது. ஹெச்ஏஎல் உடனான 40 ஆண்டு கூட்டாண்மை மற்றும் இந்தியாவின் ராணுவ திறன்களை வலுப்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டின் முக்கிய மைல்கல் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.