பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயலாளராக சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு அமலாக்க இயக்குநரகத்தின் தலைவராக பணியாற்றினார். இந்தக் குழு பிரதமருக்கு முக்கிய நிதி ஆலோசனைகளை வழங்குவதற்காகச் செயல்படுகிறது. இதற்கிடையில், சஞ்சய் குமார் மிஸ்ரா முதன்முதலில் அக்டோபர் 2018ஆம் ஆண்டு மூன்று மாதங்களுக்கு ED இன் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நவம்பர் 2018ஆம் ஆண்டு முழுநேர தலைவராக நியமிக்கப்பட்டார்.