மகளிருக்கு நிதி ஆதாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில், ‘மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, இந்த திட்டத்தில் சேராத பெண்கள் உடனடியாக சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார். இதில், குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு, https://www.indiapost.gov.in இணையதளத்தை பார்வையிடவும்.