பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு குறள் வினாடி வினா போட்டிகளின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று போட்டிகள் மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் இன்று (மார்ச் 26) நடைபெறுகிறது. மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளி மாணவர்கள், 3 கல்லூரி மாணவர்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு போட்டி நடக்கிறது. முதல் பரிசாக ரூ.1,500, இரண்டாம் பரிசு ரூ.1,200, மூன்றாம் பரிசு ரூ.1,000 என மொத்தம் 60 பேருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.