டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று(மார்ச்.25) இரவு சந்தித்து பேசியிருந்தார். டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை பேட்டியின்போது அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசினோம். இருமொழிக் கொள்கையே தொடர வேண்டம் என வலியுறுத்தினோம். தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து மட்டுமே விவாதித்தோம், கூட்டணி குறித்து பேசவில்லை என்றார்.