இயக்குநர் பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜின் மரணம் ஒட்டுமொத்த திரை உலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகராக இருந்தாலும், தந்தையைப் போல பெரிய இயக்குநராக வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது. தன்னுடைய தந்தை இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்பதே அவரின் பெரிய கனவாகும். பல வருடங்களாகவே இதுபற்றி அவர் பேசி வந்த நிலையில் அந்த கனவு நிறைவேறாமல் போயுள்ளது.