மண்டை ஓடுகளுடன் சுடுகாட்டில் மாந்திரீக பூஜை செய்த மர்ம கும்பல்

81பார்த்தது
மண்டை ஓடுகளுடன் சுடுகாட்டில் மாந்திரீக பூஜை செய்த மர்ம கும்பல்
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணூர்பட்டி ஊராட்சி கோவிந்தம்பாளையம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, வயது முதிர்வு காரணமாக மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்வதற்காக, நேற்று (மார்ச் 25) காலை அவரது உறவினர்கள் அப்பகுதியில் உள்ள மயானத்திற்குச் சென்றனர். அங்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டபோது, மயானத்தின் ஒரு பகுதியில், எரிந்த நிலையில் 6 மண்டை ஓடுகள் கிடந்துள்ளன. யாரேனும் மாந்திரீக பூஜை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி