அதிமுக, பாஜக கூட்டணி இல்லை.. அடித்து சொன்ன இபிஎஸ்

69பார்த்தது
அதிமுக, பாஜக கூட்டணி இல்லை.. அடித்து சொன்ன இபிஎஸ்
அதிமுக, பாஜக கூட்டணி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் ஏதும் பேசவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி குறித்து பேசப்படும். கூட்டணி சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அமையும். மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசவே இந்த சந்திப்பு நடந்தது. டாஸ்மாக் முறைகேடு குறித்து வலியுறுத்தியுள்ளோம் என கூறினார்.

தொடர்புடைய செய்தி