ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

71பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட மலைச்சாமிபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த குப்பம்மாள் என்ற மூதாட்டி தனது குடியிருப்பு பகுதிக்கு செல்லக்கூடிய பாதையை ஆக்கிரமித்து சிலர் கொட்டகை அமைத்துக் கொண்டுள்ளதாகவும் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்திற்கு வருகை தந்த மூதாட்டி சுப்பம்மாள் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதனையடுத்து அந்த பகுதியில் நின்று கொண்டியிருந்த செய்தியாளர்கள் மற்றும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து பேசிய மூதாட்டி: தனது புகார் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு செல்வேன் என தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் அனைத்து பொதுமக்களிடம் கடுமையான சோதனைக்கு பின்பாகவே அனுமதிக்கப்பட்டு வருவதற்காக காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி