தென் மாவட்ட மேடை கலைஞர் நலச்சங்கம் மேளதாளம் முழங்க பேரணி

67பார்த்தது
நாட்டுப்புறகலைஞர் கலைமாமணி கோவிந்தராஜுவை அரசு இசைக்கல்லூரியிலிருந்து நீக்க கோரி மேளதாளம் முழங்க நாதஸ்வரம் இசைத்தபடி கரகம் ஆடியபடி பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாட்டுப்புற கலைஞர்கள்.


மதுரை அரசு இசை கல்லூரியின் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நாட்டுப்புற கலைஞர் கோவிந்தராஜூவை இசைக்கல்லூரியிலிருந்து நீக்க கோரியும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்ப பெற வேண்டும், தகுதியுள்ள மூத்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலைமாமணி விருதையும் இசை கல்லூரியின் ஆசிரியர் பணியை வழங்க வேண்டும் என கூறி தென் மாவட்ட மேடை கலைஞர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடைபெற்றது.

அண்ணா பேருந்துநிலைய பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்கியபடி நாதஸ்வரம் இசைத்து கரகம் ஆடியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர்.

அப்போது கலைமாமணி கோவிந்தராஜூவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கோவிந்தராஜூவை பணியிலிருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்களுடன் போராட்ட முழக்கங்களை எழுப்பியவாறும் பேரணியாக வந்தடைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி