மதுரை நல்ல பெருமாள்பட்டி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க அப்பகுதி விவசாயிகள் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுமார் 700 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஏற்கனவே அரசின் நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனடைந்துள்ளனர்.
உடனடியாக மேற்கொள் முதல் நிலையம் அமைக்க வேண்டும் அதன் மூலம் நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.