சென்னையில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்ததோடு, 2026 தேர்தலில் திமுகவின் கூட்டணி கணக்கை மக்கள் மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என கூறியிருந்தார். இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற தேர்தலில் திமுகவின் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என ஒருசிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராமல் பேசிக்கொண்டிருக்கின்றனர். 234 தொகுதிகளிலும் திமுக வெல்லும் என்றார்.