மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு 3 மாதத்தில் தண்டனை வழங்க வேண்டும் எனவும் தலித் தலைவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கிட கோரியும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.