கரும்பு மற்றும் வாழைத்தார்களை எடுத்து சென்ற பொதுமக்கள்

85பார்த்தது
மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று(செப்.9) கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரிசையாக கரும்புகள் மற்றும் வாழை மரங்கள் கட்டப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நிகழ்ச்சி முடிவதற்குள் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி போட்டுக் கண்டு கரும்பு மற்றும் வாழைத்தார்களை எடுத்து கொண்டு சென்றனர். மேலும் ஆண்கள் பெண்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு கரும்புகளையும் வாழைத்தார்களையும் எடுத்துச் சென்ற சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் விழாவிற்கு வந்த அதிகாரிகளே கரும்புகளை எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி