ஆன்லைன் கட்டட வரைபட அனுமதி; மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிப்பு

50பார்த்தது
ஆன்லைன் கட்டட வரைபட அனுமதி; மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிப்பு
மதுரை மாநகராட்சியில் ஆன்லைன் கட்டட வரைபட அனுமதி வழங்கும் முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ. 3. 50 கோடி வருவாய் அதிகரித்துள்ளது என கமிஷனர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2, 500 சதுர அடி முதல் 3500 சதுர அடிக்குள் (தரைத்தளம், முதல்தளத்துடன்) வீடு கட்டுவோர் ஆன்லைனின் விண்ணப்பித்து உடனே கட்டட வரைபட அனுமதி பெறும் திட்டம் ஜூலையில் துவங்கப்பட்டது.

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இத்திட்டத்தில் மதுரையில் ஜூலை முதல் தற்போது வரை 516 கட்டடங்களுக்கு வரைபட அனுமதி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநகராட்சிக்கு வருவாயாக ரூ. 5 கோடியே 84 லட்சத்து 24 ஆயிரத்து 654 கிடைத்துள்ளது. வருவாய் அதிகரிப்பில் மாநில அளவில் மதுரை மாநகராட்சி முன்னிலையில் உள்ளது.

பழைய நடைமுறையில் ஐந்து மண்டலங்களிலும் மாதம் 80 பேர் அனுமதி பெற்ற நிலையில் தற்போது 200க்கும் மேற்பட்டோர் அனுமதி பெறுகின்றனர். இதன் மூலம் மாதம் ரூ. 3.50 கோடி வரை வருவாய் அதிகரித்துள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி