மதுரை: காயங்களுடன் பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவன்

80பார்த்தது
மதுரை நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற மாணவன் மதுரா கல்லூரி பள்ளியில் +1 படித்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விராதனூர் அருகே பேருந்திற்காக காத்திருந்தபோது அரசு பேருந்து ஒன்று மோதி கால் மற்றும் இடுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று +1 தேர்வு தொடங்கியதால் கடுமையான காயத்துடனும் தேர்வுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே படித்த மாணவன் தினேஷ் காலில் காயத்தோடு உதவியாளர் உதவியுடன் +1 தேர்வை எழுதி வருகிறார்.


மாணவன் தினேஷின் தந்தை சிறு வயதிலயே முன்பு உயிரிழந்த நிலையில் கூலித்தொழிலாளியான தனது தாயாரின் ஆசையான நன்கு படிக்கும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக வேதனையையும் பொருட்படுத்தாமல் பொதுத்தேர்வு எழுதி வருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி