மதுரை: மழையால் மூழ்கிய தரைபாலங்கள் ;சிக்கித் தவித்த வாகனங்கள்

74பார்த்தது
மதுரை மாநகரில் அண்ணாநகர், மதிச்சியம், நெல்பேட்டை, சிம்மக்கல், செல்லூர், கோரிப்பாளையம் ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக திடீரென மழை பெய்தது.

இதனால் மதுரை யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டிய சர்வீஸ் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியதால் கோரிப்பாளையத்திலிருந்து ஆரப்பாளையம் தத்தனேரி நோக்கி செல்லும் வாகனங்கள் நீரில் மூழ்கிய படி சென்றது இதனால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மதுரை சிம்மக்கல் முதல் ஆரப்பாளையம் செல்லக்கூடிய சாலையில் மணி நகரம் பகுதியில் அமைந்துள்ள கர்டர் தரைப்பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக வைகை ஆற்றை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால் ஆரப்பாளையம் முதல் விரகனூர் வரையிலும் அண்ணாநகர் முதல் தத்தனேரி வரையிலும் இரண்டு புறங்களிலும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் அவனியாபுரம் , பெரியார் பேருந்து நிலையம் காளவாசல் என பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பிரதான சாலைகள் முழுவதிலும் போக்குவரத்து நெரிசல் நிலவியதால் வாகனங்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக ஊர்ந்து செல்லும் நிலை உருவானது.

சர்வீஸ் சாலை மற்றும் தரைப் பாலங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் பழுதடைந்து ஆங்காங்கே நின்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி