மதுரையில் இருந்து தென்மாவட்ட பா. ஜ. , வினர் ஆயிரத்து 500 பேர் நேற்று சிறப்பு ரயிலில் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மதுரையில் இருந்து நேற்று சிறப்பு ரயில் புறப்பட்டது.
இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் சென்றனர். இதற்கான பொறுப்பாளரான பா. ஜ. , துணைத் தலைவர் பழனிவேல், ஐ. டி. , பிரிவு மாநில துணைத் தலைவர் விஷ்ணுபிரசாத், மருத்துவ பிரிவு முரளிபாஸ்கர், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சரவணன் உட்பட பலர் வழி அனுப்பி வைத்தனர்.
ரயில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் இதற்காக ரூ. 3 ஆயிரம் செலுத்தியுள்ளனர். இவர்கள் 8
நாட்கள் அயோத்தி உட்பட பலபகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அங்கு தங்குவதற்கும், உணவுக்கும் இத்தொகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.