சிறந்த காவல்நிலையத்திற்கு பாராட்டு.!!

50பார்த்தது
சிறந்த காவல்நிலையத்திற்கு பாராட்டு.!!
மதுரை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு முதல்வரின் சிறந்த காவல் நிலையம் விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது.

இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்தது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது, சட்டம்- ஒழுங்கைப் பராமரித்து, விபத்துக்களை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட காவல் நிலையங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில், சிறந்த காவல் நிலையமாக விருதுக்கு தேர்வாகியுள்ளது.

இதற்கான விருதினை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் இ. கா. ப அவர்கள் உசிலம்பட்டி நகர் காவல் ஆய்வாளர் திரு. ஆனந்த் அவர்களிடம் வழங்கினார்கள்.

இவ்விருதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா. க. அரவிந்த் காண்பித்து பாராட்டு பெற்றனர்.

தொடர்புடைய செய்தி