மதுரை தபால் தந்திநகர் கோதாவரி தெரு பாமா நகரில் கிருஷ்ணக்குமார் மனைவி, தாயார் கஸ்தூரி கலா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கிருஷ்ணகுமார் பெங்களூரில் IT நிறுவனத்தில் வேலை செய்யும் இந்நிலையில் கிருஷ்ணகுமாரின் வீட்டின் அருகிலயே காவல்துறையில் துணை கண்காணிப்பார் வினோதினி வசித்து வருகிறார்.
இந்நிலையில் கிருஷ்ணகுமாரின் வீட்டை DSP வினோதினி விலைக்கு கேட்டதாகவும் அதற்கு கிருஷ்ணகுமார் குடும்பத்தினர் தர மறுத்துள்ளார் இரு குடும்பத்தினர் இடையே பிரச்சனை இருந்துள்ளது.
இதன் காரணமாக கிருஷ்ணகுமார் தனது வீட்டில் CCTV கேமரா தொடர்பாக DSP வினோதினியின் சகோதரி அமுதா
புகாரில் கிருஷ்ணகுமார் தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்தவர் வீட்டின் மாடியில் வைத்திருந்த CCTV கேமிராக்களை கிருஷ்ணகுமாரே அகற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய மன உளைச்சலோடு வீட்டின் அறைக்குள் சென்றவர், இதையடுத்து 14ஆம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் அவரது போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் கிருஷ்ணகுமாரை தொடர்புகொள்ள இயலாததால் கிருஷ்ணகுமாரின் தாயார் கஸ்தூரி கலா தல்லாகுளம் காவல்நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளார் போலீசார் விசாரிக்கின்றனர்.