அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் தனிமையான தீவு 'திரிஸ்டான் டா குன்ஹா' தீவு. எரிமலை தீவுக்கூட்டமாக இது அறியப்படுகிறது. இது உலகின் ஆபத்தான இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது, ஆனாலும் இங்கே 200-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். திரிஸ்டான் டா குன்ஹா தீவில் விமான நிலையங்கள் இல்லை, மற்ற நாட்டினர் இந்த தீவுக்குள் வருவதற்கு மற்றும் தீவு மக்கள் வெளியே செல்வதற்கு கப்பல் போக்குவரத்து உள்ளது.