கேரளா: திருவனந்தபுரம் தம்பனூரில் உள்ள லாட்ஜில் பெண்ணை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேயாட்டை பூர்வீகமாக கொண்ட குமார் மற்றும் ஆஷா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆஷா கழுத்து அறுபட்ட நிலையிலும், குமார் நரம்பு அறுபட்ட நிலையிலும் இன்று (ஜன., 12) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.