நடிகை ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் பயிற்சி செய்த போது தனது காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை குறித்து புகைப்படங்களுடன் கூடிய பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் தனது இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தற்போது சிக்கந்தர், தாமா மற்றும் குபேரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த சமயத்தில் காலில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தமாதம் ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கோரினார். விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன் என கூறியுள்ளார்.