நார்வேயின் ஸ்டட் தீபகற்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும் ராட்சத அலைகளுக்கும் புகழ்பெற்றது. இந்த பகுதியில் கப்பல்களின் பயண நேரத்தை குறைத்து அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் தயாராகியுள்ளது. கடும் பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் 'உலகின் முதல் கப்பல் சுரங்கம்' உருவாக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இருந்து விலகி அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் குடையப்பட்டுள்ளது.