கன்னியாகுமரி: இரணியலை சேர்ந்தவர் தங்கம்மாள் (71). மகன் பிரபுலால் (44). இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். பிரபுலால் தாயுடன் வசித்து வந்த நிலையில், தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டை எழுதி தருமாறு சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று (ஜன., 11) மதுபோதையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு இல்லை எனக்கூறி, நாற்காலியை எடுத்து தாயின் பின்தலையில் அடித்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தங்கம்மாள் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பிரபுலாலை கைது செய்தனர்.