2-மணி நேரத்திற்கும் மேலா காற்றுடன் மதுரையில் பலத்த மழை

52பார்த்தது
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மதுரையில் இன்று காலை முதல் கடும் வெயில் நிலவிய நிலையில் மாலை 3 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 6 மணி அளவில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலா காற்றுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது.

குறிப்பாக மாநகர் பகுதிகளான கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், காளவாசல், பசுமலை, திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், முனிச்சாலை, தெப்பக்குளம், கீழவாசல், தெற்கு வாசல், வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதில் கீழவாசல் - தெற்குவாசல் இடையேயான சாலையில் மழை நீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். சிம்மக்கல், கீழவாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டார்கள்.

மேலும் சாலைகளில் தேங்கி நின்ற மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டார்கள். தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி