மதுரை மாநகரில் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையம் , அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் திருவிழாக்களின் போது செல்போன்கள் திருடப்பட்டதாக ஏராளமான புகார்கள் பெறப்பட்டன.
குறிப்பாக மீனாட்சியம்மன் கோவில் காவல்நிலைய சரகம், அவனியாபுரம், திடீர்நகர், திலகர்திடல், தல்லாகுளம், செல்லுார், அண்ணாநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல்நிலையங்களில் காணாமல் போன செல்போன்கள் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
செல்போன்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு மதுரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு செல்போன்கள் திருட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் வழப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி மதுரை மாநகர பகுதியில் 45 லட்சத்தி 24 ஆயிரத்தி 348 செல்போன்கள் தனிப்படை காவல்துறையினர் மூலமாக மீட்கப்பட்டது.
இதனையடுத்து இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மீட்கப்பட்ட 348 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் காவல் ஆணையர் லோகநாதன் நேரடியாக வழங்கினார்.
அப்போது பொதுமக்களிடமும் பொதுஇடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், சந்தேகத்துக்குறிய நபர்கள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.