போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செய்த முன்னாள் அமைச்சர்

51பார்த்தது
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செய்த முன்னாள் அமைச்சர்
மதுரை புறநகர் மேற்கு
மாவட்ட கழகம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகத்தின்
சார்பில், பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வழக்கும் நிகழ்ச்சி வாடிப்பட்டியில் நடைபெற்றது. வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம். காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பாசறை துணைச் செயலாளர் எம். கே.
மணிமாறன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர்
ஆர். பி. உதயகுமார் வழங்கினார்.


பின்னர் , ஆர். பி. உதயகுமார் பேசும்போது:

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. ஆனால், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று திமுக அரசு பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.

தமிழகத்தில் நடைபெறும்
சட்ட விரோத செயல்களுக்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்தால், பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா? காவல்துறை அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட வைத்தால் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என பேசினார்.

தொடர்புடைய செய்தி