மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பாக முதல் வகுப்பில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு ரூ 10, 500 மதிப்பில் விளையாட்டுச் சீருடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார் , ஆசிரியர் மோசஸ் வரவேற்றார், முன்னாள் மாணவர்கள் விஜயலட்சுமி மற்றும் சுரேஷ்குமார் நன்கொடை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.