திமுக கூட்டணி நிச்சயமாக உடையும்-திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

64பார்த்தது
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2014ல் அளித்த ரூ. 4. 5 கோடி மதிப்பிபான 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் பாங்க் ஆப் இந்தியா வாங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அக். 30 அன்று தேவர் ஜெயந்தியன்று சிலைக்கு அணிவிப்பதற்காக, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் ஆகியோர் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு தங்க கவசத்தை பெற்றனர். காவல்துறை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும் தங்கக்கவசம் நவம்பர் 1 அன்று மீண்டும் வங்கி பெட்டகத்தில் வைக்கப்படும்.

இந்நிகழ்வுக்கு பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டியில்,
"2026 தேர்தலில் எல்லா கட்சியும் தனித்து நிற்க தயார் என்றால் அதிமுக முதலில் ரெடியாக இருக்கும். தேர்தல் நேர சூழலை பொறுத்தே இதை முடிவு செய்ய முடியும்.

திமுக கூட்டணி எப்போது உடையும் என ஜோசியக்காரர் போல எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கிறார் என முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு,
"பெரிய ஜோசியக்காரர் ஐஎ இல்ஸ்டாலின் ஐயா தான். நிச்சயமாக திமுக கூட்டணி உடையும். தேர்தல் நேரத்தில் தெரியும். Wait and see. திமுக கூட்டணிக்குள் விவாதங்கள் நடப்பதாக ஸ்டாலின் சொன்னாலும், விரிசல் நடப்பது உறுதி" என பதிலளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி