திமுக - அதிமுக மோதலாக மாறிய சுங்க சாவடி பிரச்சினை

70பார்த்தது
மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியினை அகற்றக் கோரி திருமங்கலம் வணிகர் சங்கம் சார்பில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் எம் சாந்தி மற்றும் NHAI அதிகாரிகள்
சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு மற்றும் போராட்டக் குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

2020 ஆம் ஆண்டு என்ன விதிமுறைகளின் படி வாகனங்களுக்கு கட்டண விளக்கு அளிக்கப்பட்டதோ அதன்படி அந்த நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார், மேலும் திருமங்கலம் பகுதி மக்கள் தங்கள் ஆதார் கார்டுகளை காண்பித்து அங்கிருந்து இலவசமாக செல்லலாம் என தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத திருமங்கலம் பகுதி வணிகர்கள், அனுமதி இல்லாமல் இங்கு அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியை முற்றிலுமாக இங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும் 2020 ஆம் ஆண்டு என்ன நடைமுறைகள் இருந்தன என தெரிவிக்கும்படியும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வ கடிதம் கொடுக்கும்படி கூறினார். அது தலைமை இடத்தில் பேசி வாங்கப்படும் என அமைச்சர் கூறியதையடுத்து, பேச்சுவார்த்தை நடைபெற்ற இடத்தில் இருந்து வணிகர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்புடைய செய்தி