மதுரை, கோ. புதூர் போலீஸ் எஸ். ஐக்கள் அனிதா, சீனிவாசகம், ஏட்டு சரவணக்குமார் மற்றும் போலீசார், வெங்கடேஷ், ஆயுதப்படை சுரேஷ்குமார் கொண்ட தனிப்படையினர், அழகர்கோவில் ரோடு சூரியா நகரில் ரோந்து சென்றனர்.
அப்போது சிறுவர்களுக்கு கூல்லிப் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செயத மாத்தூர் பூரணிரோட்டை சேர்ந்த அபுதாகிர்(38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கூல்லிப் மற்றும் 676 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் தெப்பக்குளத்தை சேர்ந்த ராஜபாண்டி(43), எஸ். ஆலங்குளத்தை சேர்ந்த பாண்டியராஜன்(28). ஆகியோர், போதை பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாகனசோதனை நடத்தியபோது, இருவரும் சிக்கினர். விசாரணையில் கூல்லிப், பான் மசாலா போன்றவற்றை ராஜஸ்தானில் இருந்து கொள்முதல் செய்து கொண்டு வந்து காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்வதாக ராஜபாண்டி கூறினார். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களின் டூவீலர்கள், 174 பண்டல்கள் கூல்லிப், பான்மசாலா 180 பண்டல்கள் மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் 180 பண்டல்கள் என மொத்தம் 534 பண்டல்களை பறிமுதல் செய்தனர்.