அப்பளம் வடகம் மோர் வத்தல் நலச் சங்கம் - உலக சந்தைக்கு ஏற்றுமதி வழிகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முனைவர் க. திருமுருகன்தலைமை தாங்கினார். உலக சந்தைக்கு பாரம்பரிய உணவுப் பொருட்களை எவ்வாறு ஏற்றுமதி செய்யலாம் என்பதற்கான விளக்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தனசேகரன் அவர்கள் IEC, GST, AD சுங்கப் பதிவு ஆகியவற்றைப் பற்றி விளக்கமளித்தார். சந்துரு அவர்கள் APEDA, FSSAI, HACCP சான்றிதழ்களின் முக்கியத்துவத்தை கூறினார். மேலும், குற்றாலிங்கம் அவர்கள் US-FDA, Halal, Kosher, ECGC காப்பீடு மற்றும் சரக்குகளை SEA, AIR மூலம் அனுப்பும் முறை பற்றி விளக்கமளித்தார். இந்த நிகழ்வில் மாநில இணைச்செயலாளர் மணிகண்டன் உள்பட 75க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றனர். மாநிலச் செயலாளர் விஜிஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று, கார்த்திகேயன் நன்றி உரையாற்றினார்.