2026 ஆம் ஆண்டு ஒன்றினைந்து தேர்தலை சந்திப்போம்; செல்வப் பெருந்தகை

78பார்த்தது
மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை மாணவர்களிடையே சிறப்பு உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் மகாவிஷ்ணுவை யார் பள்ளியில் பேச அனுமதி தந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகிறோம். விஞ்ஞான யுகம் நடந்து கொண்டிருக்கிறது. அவர் மோடியிடம் கற்றுக் கொண்டாரா என தெரியவில்லை.? ஒரு குப்பனோ, சுப்பனோ பேசி இருந்தால் பெரிதாக இருந்திருக்கிறது.! மகாவிஷ்ணு இப்படி பேசி இருக்கிறார்.

விஞ்ஞான யுகத்தில் இருந்து கொண்டிருக்கும் காலத்தில் முற்பிறவியில் நீங்கள் செய்த பாவத்தால் ஊனமுற்றவராக பிறந்திருக்கிறீர்கள் என பேசி இருப்பது மூடத்தனமான முட்டாள்தனமான நபர் என்பது காட்டுகிறது.

மனுநீதியை மீண்டும் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாவிஷ்ணு பேசியிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி