மதுரை மாவட்டம் முழுவதிலும் நேற்று இரவு கனமழை பெய்த நிலையில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கிநிற்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்ததுள்ளது.
இதனால் திங்கள்கிழமையான இன்று குறைதீர் கூட்ட முகாமிற்கு மனு அளிக்கவரும் பொதுமக்கள் கூடுதல் கட்டிட அலுவலகம் முன்பு சாலை முழுவதிலும் மழைநீர் குளம்போல தேங்கி இருப்பதால் மனு அளிக்க வாகனங்களில் மட்டும் செல்லும் நிலைவுள்ளது.
இதனால் மனு அளிக்கவரும் பொதுமக்கள் மழை நீரில் நனையாதவாறு செல்வதற்காக குதித்து குதித்து மனு அளிக்க செல்லும் நிலை உருவாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளதால் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்துடன் மனு அளிக்க சென்று வருகின்றனர்.
தேங்கிய மழைநீருக்குள் செல்வதற்கு சிரமப்பட்டு தடுப்பு சுவர்களின் மீது நடந்து செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலையும் உருவாக்கி வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதிலும் வெள்ளம் போல மழைநீர் சூழ்ந்து வருவதால் பொதுமக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய அதிகாரிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.