மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

66பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட யா. ஒத்தக்கடை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'மக்களுடன் முதல்வா்' திட்ட சிறப்பு முகாமை அமைச்சா் பி. மூா்த்தி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், முகாமில் பெறப்பட்டு உடனடியாக பரிசீலீக்கப்பட்ட சில மனுக்களுக்கான தீா்வு உத்தரவுகளை பயனாளிகளிடம் வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு சேவைகள், பொதுமக்களுக்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் 'மக்களுடன் முதல்வா்' திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டு டிச. 18-ஆம் தேதி முதல் 2024-ஆம் ஆண்டு ஜன. 6-ஆம் தேதி வரை நகா்ப்புற பகுதிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், 38, 441 கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டன.

இரண்டாம் கட்டமாக தற்போது ஊரகப் பகுதிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பெறப்படும் அனைத்து மனுக்களும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, தகுதியான மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் தீா்வு காணப்படுகிறது. எனவே, இந்த முகாம்களை பொதுமக்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி