பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழா அடுத்த மாதம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வர உள்ள நிலையில் திருவிழாவை முன்னிட்டு 5 நாட்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
இந்தஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஆடி அமாவாசை விழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் தலைமையில் காவல்துறை, இந்து அறிநிலையத்துறை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் சதுரகிரி மலைப்பாதையில் யானை, சிறுத்தை, கரடி, வன விலங்குள் நடமாட்டம் இருப்பதால் சதுரகிரி மலைப்பகுதியில் ஆடி அமாவாசை திருவிழா நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிவரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். எனவும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் சதுரகிரிக்கு பேருந்துகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.