மின்சாரம் பாய்ந்து 10 வயது சிறுமி துடிதுடித்து பலி

83பார்த்தது
மின்சாரம் பாய்ந்து 10 வயது சிறுமி துடிதுடித்து பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகள் ஊருக்கு வருவதை தடுப்பதற்காக, மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அதன் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி திவ்யாஸ்ரீ, எதிர்பாராத விதமாக அந்த மின்சார வேலியை தொட்டுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிறுமியை மீட்ட நிலையில், மின்வேலி அமைத்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி