நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் வெலிங்டனுக்கு, 2021ஆம் ஆண்டு, டிச.8ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் மேற்கொண்டனர். அந்த ஹெலிகாப்டார் விபத்துக்கு உள்ளானதில் அனைவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில், 'எதிர்பாராத காலநிலை மாற்றத்தால், விமானத்தை விமானி மேகத்திற்குள் செலுத்தியதே இந்த விபத்திற்கு காரணம்' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.