அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சிகள் எத்தனை பேர் அரசு பொறுப்புகளில் உள்ளனர் உள்ளிட்ட விவரங்களை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உள்துறை செயலாளரை ஒரு எதிர் மனுதாரராக இணைத்து நோட்டீஸ் பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம் சாட்சிகள் தொடர்பான விவரங்களை ஜன.15-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.