தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை

52பார்த்தது
தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச., 20) நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகரக்கூடும். இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி