சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற இந்திய வீரர் அஸ்வினை, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார். அவர், “டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக ஓய்வு பெறுவது ஒரு மகத்தான சாதனை. அஸ்வினை நினைத்து தமிழக கிரிக்கெட் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமே பெருமைப்படுகிறது. 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல” என கூறியுள்ளார்.