ரேஷன் கடையில் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டையை எடுத்த செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, அரசின் Mera Ration 2.0 செயலி இருந்தாலே போதும். அரசின் இந்த செயலி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியில் உங்கள் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட்டீர்கள் என்றால், அதில் உங்கள் ரேஷன் கார்டு குறித்த விவரங்கள் அனைத்தும் வந்துவிடும். எனவே, நீங்கள் அதை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.