ஃபெஞ்சல் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வை நாளை (டிச.21) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு கடந்த 12-ந்தேதி கனமழையால் விடுமுறை விடப்பட்டு நடத்த முடியாமல் போன அரையாண்டு தேர்வு, நாளை (டிச.21) நடத்தப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.