கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு சாமியார் ஒருவர் தீர்த்தத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விஷ தீர்த்தத்தை தானும் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனக்கும், நண்பர், உதவியாளருக்கும் சேர்த்து 1 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் தொந்தரவு இருந்ததால் சாமியார் செய்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.