ஐடி ஊழியர் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பம்

55பார்த்தது
மதுரை தபால் தந்தி நகரைச் சார்ந்த கஸ்தூரி கலா தாக்கல் செய்த மனு. ஐடி ஊழியரான தனது மகன் கிருஷ்ணகுமார் காணவில்லை என்று புகார் மனு அளித்து இருந்தார்.


இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா மற்றும் நீதிபதி ராஜசேகர் அமர் முன் விசாரணைக்கு வந்தது.


விசாரணை செய்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில்: -

அமுதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 12 ஆம் தேதி போலீசார் கிருஷ்ணகுமார் அழைத்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மனுதாரர் தனது மகனை 14 ஆம் தேதி காணவில்லை என புகார் செய்து உள்ளார்.

இந்நிலையில் விசாரணையில் கிருஷ்ணகுமாரின் செல்போன் 13ம் தேதி இரவு10 மணி அளவில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகே தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மேலும், கிருஷ்ணகுமார் கோயம்புத்தூரில் பணிபுரிவதாக தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் அலுவலகத்தில் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மருத்துவ விடுப்பும் பெற்றுள்ளார்.

இந்த சூழலில் மனுதாரர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மீது குற்றம் சுமத்துகிறார்.

இந்த வழக்கில் மகன் காணாமல் போனதாக தாயார் கொடுக்கப்பட்ட புகாரின் பேரிலும் அதேபோல் அமுதா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

தொடர்புடைய செய்தி