மத்தியபிரதேச போக்குவரத்து காவல்துறை சாலையில் நடந்து சென்ற சுஷில் குமார் சுக்லா என்ற நபருக்கு ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக ரூ.300 அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுஷில் குமார் சுக்லா, எஸ்பியிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட எஸ்பிஐ விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.